wfs
- சிறுகதைத்தொகுப்பு

விமர்சனங்கள்-13


புலம்பெயர் படைப்புகளில் அகிலின் கூடுகள் சிதைந்த போது என்னும் சிறுகதை கவனப்படுத்தப்படவேண்டிய சிறுகதையாக அமைகின்றது. வாழ்வின் ஊடாக தான் பெற்ற அனுபவங்ளைக் கதாபாத்திரங்களாக நூல் முழுதும் உலவ விட்டிருக்காறார் அகில்.இந்நூல் குறித்து பேராசிரியர் கா.சிவத்தம்பி ,
நவீன காலத் தமிழ் இலக்கியத்திலே சிறுகதை, பொலிவுடன் வளர்ந்துள்ள ஓர் இலக்கிய வகையாகும். புதுமைப்பித்தன் பரம்பரை என்றுகூடச் சொல்லலாம். அகிலிற்கு அந்த நீண்ட செழிப்பான தமிழ்ச் சிறுகதை பாரம்பரியத்தில் நிலையான இடம் வேண்டுமானால் தொடர்ந்து இத்தொகுதியிலே உள்ளன போன்ற சிறுகதைகளை எழுதுதல் வேண்டும்.

கூறுவதற்கேற்ப அகிலிடமிருந்து இது போன்ற சிறுகதை தொகுதிகள் வரவேண்டுமென்ற எதிர்பார்ப்பை இந்நூல் உருவாக்கியுள்ளது.

- முனைவர் கல்பனாசேக்கிழார்          






அகிலேஸ்வரன் சாம்பசிவம் யாழ் மாவட்டத்துக்காரர். 1991ல் புலம்பெயர்ந்து இந்தியா, இலண்டன் என்று இருந்து தற்போது கனடாவில் தமிழ் ஆதர்ஸ்.கொம் நடத்துவதுடன் தமிழ்ப் புனைகதை எழுத்தாளராய் கவிதை, நாவல் என எழுதியவரின் சிறுகதைகள் இவை. ஈழத்தின் புனைகதைத் துறைக்கு நம்பிக்கை தரும் இளம் குருத்துகளின் முதல்வரிசையில் அகில் இருக்கின்றார்.

எனது உள்ளப் பதிவுகளையும் பாதிப்புகளையும் வெளிக்கொண்டு வருவதற்கு சிறந்த ஊடகமாக சிறுகதை எனக்குள் வசமானது சமீபத்திய சிறுகதைகளித் தேர்ந்த 14 சிறுகதைகளின் தொகுப்பு இது என்கிறார். அத்துடன் அவர் உங்களின் பெருமூச்சிற்காய், உங்களின் விம்மலுக்காய், உங்களின் ஆசுவாசத்திற்காய், உங்களின் இதயத்தின் துடிப்பிற்குமாய்... ப்ரியப்படுகிறார். நிச்சியம் அவர் அதற்குத் தகுதியானவர்தான்.

காவ்யா தமிழ் ( காலாண்டிதழ்)                    -   பேரா.சுந்தரபாண்டியன்