wfs
- சிறுகதைத்தொகுப்பு

விமர்சனங்கள்





இயல்பான மொழிப் பிரயோகத்தினால் மனித உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தி சாதிக்கவல்லவை என்பதை இத் தொகுதிக் கதைகள் நிறுவுகின்றன. 'கூடுகள் சிதைந்தபோது' கதை இதற்கான ஒரு பதச் சோறு எனலாம்.

இரண்டாம் விசுவாமித்திரன்-இலங்கை 


நவீன கால தமிழ் இலக்கியத்திலே சிறுகதை பொலிவுடன் வளர்ந்துள்ள ஓர் இலக்கிய வகையாகும். புதுமைப்பித்தன் பரம்பரை என்று கூடச் சொல்லலாம். அகிலிற்கு அந்த நீண்ட செழிப்பான தமிழ்ச் சிறுகதை பாரம்பரியத்தில் நிலையான இடம் வேண்டுமானால் தொடர்ந்து இத்தொகுதியிலே உள்ளன போன்ற சிறுகதைகளை எழுதுதல் வேண்டும்.
                                                                   
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி                                           


தமிழிலக்கியத்தில் சரவணையைப் பரம்பல் செய்த  முன்னோடிகளாக சரவணையூர் மணிசேகரன், தில்லைச்சிவன் ஆகியோரைச் சுட்டலாம். இந்த முன்னோடிகளின் தமிழிலக்கியப் பணிக்கு மேலும் வலுவூட்டிச் சரவணையின் தமிழிலக்கிய வளத்தை மேலும் நீட்சிப்படுத்துபவராக அகில் முகிழ்ந்திருப்பது அவ்வூர் மக்களை மட்டுமின்றி அனைத்து தமிழிலக்கிய அபிமானிகளையும் பேருவகைப்படுத்தும்.

மா.பாலசிங்கம் (தினக்குரல்) 


கற்பனைக் கதைகளையே புனைந்து படித்துப் பழக்கப்பட்ட தமிழ் நாட்டவரை சிலிர்க்க வைக்கும் காட்சிகள். கதைகளாக.
 முகம் 


'கூடுகள் சிதைந்தபோது' என்ற சிறுகதை போரின் உக்கிரத்தை சொல்லும் ஒரு புனைகதையாக   மட்டும் எடுத்துக்கொள்ள முடியாது.
சு. இரமேஷ் (அடவி) 





வலி, கூடுகள் சிதைந்தபோது என்ற இரண்டு கதைகளையும் இத்தொகுப்பின் மிகச்சிறந்த சிறுகதைகளாக நான் இனம் காண்கிறேன். அகிலின் படைப்பாக்கச் செய்நேர்த்தியில் உச்சத்தைத் தொட்ட கதைகளாக இவற்றைக் குறிப்பிடமுடியும்........
- முனைவர் நா.இளங்கோ                                              



புலம்பெயர் படைப்புகளில் அகிலின் கூடுகள் சிதைந்த போது என்னும் சிறுகதை கவனப்படுத்தப்படவேண்டிய சிறுகதையாக அமைகின்றது..........
- முனைவர் கல்பனாசேக்கிழார்                                


தமிழ்ப் புனைகதை எழுத்தாளராய் கவிதை, நாவல் என எழுதியவரின் சிறுகதைகள் இவை. ஈழத்தின் புனைகதைத் துறைக்கு நம்பிக்கை தரும் இளம் குருத்துகளின் முதல்வரிசையில் அகில் இருக்கின்றார்.............
காவ்யா தமிழ் (காலாண்டிதழ்

ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கும் அகில், 14 சிறுகதைகள் மூலம் போர்ச்சூழுலை ஒட்டிய ஈழத்தின் நெருக்கடியான வாழ்வியல் அனுபவங்களையும், அவலங்களையும் காட்சிப்படுத்துகிறார்............
- குங்குமம்


வானத்தில் தோன்றும் மின்னல் அடுத்து பூமியில் தட்பவெப்பத்தில் என் மாறுதல்களை ஏற்படுத்தும் என்று சொல்லாமல் சொல்லி மறைந்துவிடும். அதுபோல சிறுகதையின் முடிவும் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்பார்கள். அப்படி இருக்கிறது...........

- குமுதம் சிநேகிதி

திசைமாறிய தென்றல், கண்ணின் மணி நீயெனக்கு - ஆகிய இரு நாவல்களைத் தந்த அகில் (சாம்பசிவம் அகிலேஸ்வரன்) 'கூடுகள் சிதைந்தபோது' என்ற சிறுகதைத் தொகுப்பின் வழியாகவும் தற்போது வெளிப்பட்டிருக்கிறார்............

- மேலாண்மை பொன்னுச்சாமி

அகில் என்றால் சந்தனம் என்று பொருள். சஞ்சதம் எப்படி மணக்குமோ அப்படியே அகிலின் எழுத்துச்சாரம் மணக்கிறது. கூடவே சில கதைகளை வாசித்த பிறகு நெஞ்சம் கனக்கிறது............
- இந்திரா சௌந்தர்ராஜன்

சாப்பசிவம் அகிலேஸ்வரன் என்கிற 'அகில்". எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு ரஷிய அரசின் விருது வழங்கும் விழாவில்தான் அவரைச் சந்தித்தேன்
- கலாரசிகன் (தினமணி)                

அகிலின் 'உறுத்தல்" கதையை அவரது இந்த சிறுகதைத் தொகுப்பில் இருந்து எடுத்து வெளியிட்டு இருந்தோம். ஈழத்தமிழரான அகில் இச்சிறுகதையை எழுதியிருக்கிறார்............

- உண்மை

இலங்கையில் யாழ்ப்பாணத்தில் பிறந்த அகில் (அகிலேஸ்வரன்சாம்பசிவம்) இப்பொழுது கனடாவில் வசிக்கிறார். சிறந்த எழுத்தாளர்களாக புகழ் பெற்றுள்ள இலங்கைத் தமிழர்களில். இவரும் ஒருவர்.

தினத்தந்தி 

நூலின் அட்டைப்படமும் அச்சும் மிக நேர்த்தியாக உள்ளது .வம்சி பதிப்பகத்திற்கு முதலில் பாராட்டுக்கள் .நூல் ஆசிரியர் திரு அகில் www.tamilauthors.com என்ற இணையத்தின் மூலம் ஆயிரத்திற்கும்......
- கவிஞர் இரா.இரவி

இறைவனுக்கும் தொண்டருக்குமான ஆண்டான் -அடிமை உணர்வை மாணிக்கவாசகர் சொல்லச்சொல்ல எழுத்தாணி கொண்டு நீலகண்டேஸ்வரர் ஏட்டில் எழுதியது அக்காலம்!தாய்நாட்டிற்கும் புலம்பெயர்............

 - முனைவர் ச.சந்திரா


 திரு அகில் அவர்கள் எழுதிய 'கூடுகள் சிதைந்தபோது ' என்கிற சிறுகதைத் தொகுப்பு எண்ணங்களின் தொகுப்பு. வண்ணங்களின் தொகுப்பு. புலம் பெயர்ந்த மககளின் துன்பங்களின் சோகத் தொகுப்பு......
- விமலா ரமணி 

 'அகில்' என்று தமிழ் பேசுவோர் நிறைந்த அகிலமெங்கும் அறியப்பட்டிருக்கிற திரு.சாம்பசிவம் அகிலேஸ்வரன் அகதியாக கனடாவில் போயமர்ந்திருக்கின்ற இலங்கைத் தமிழர்...........
- கலைமாமணி ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன்  


'கூடுகள் சிதைந்தபோது.....' படித்து முடித்துவிட்டேன். ஒரே வாக்கியத்தில் சொல்ல வேண்டுமாயின், அத்தனை கதைகளும் அற்புதம்! வெறும் புகழ்ச்சிக்காக நான் இவ்வாறு கூறவில்லை..........
- ஜோதிர்லதா கிரிஜா